• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா: சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு IAS மற்றும் IPS அதிகாரி நியமனம் - தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

கொரோனா: சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு IAS மற்றும் IPS அதிகாரி நியமனம் - தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ்.

"காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டங்களுக்கும் இதேபோல் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்."

  • Share this:
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு IAS மற்றும் IPS அதிகாரி நியமனம் செய்திருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு IAS மற்றும் IPS அதிகாரியை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்திருக்கிறது. காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டங்களுக்கும் இதேபோல் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். சிறப்பு!

    கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட, மண்டல வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த 7ஆம் தேதி தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். அதற்கு தமிழக அரசு இப்போது செயல் வடிவம் கொடுத்திருப்பது மனநிறைவளிக்கிறது. கொரோனா விரைவில் ஒழியட்டும்!”

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: