• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா 2வது அலை : மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

கொரோனா 2வது அலை : மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தினசரி நோய் தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகின்றார். காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனா பரவல் விகிதம் தொடர்பாகவும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்க இருக்கிறார்.

    Must Read :  புதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. தெலங்கானவிலிருந்து எடுத்து வந்து உதவிய ஆளுநர் தமிழிசை

     

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: