மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

பிரதமர் மோடி

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 • Share this:
  நாடு முழுவதும கொரோனா 2-ஆவது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் நாள்தோறும் லட்சக் கணக்கனோர்களுக்கு புதிய பாதிப்புகளும், ஆயிரக்கணக்கான மரணங்களும் என அதிகரித்து வருகின்றன.

  பல்வேறு இடங்களில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

  இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மாநிலங்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் அறிவுறித்தி வருகிறார்.

  அந்த வகையில், இன்று அவர் மத்திய அமைச்சர்கள் குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கொரோனாவால் நாடு சந்தித்து வரும் மோசமான சூழல் மற்றும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கூறப்படுகின்றது.

  நேற்று, ராணுவ தளபதி நரவனேயுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ராணுவம் மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நரவனே பிரதமருக்கு விளக்கினார்.

  அப்போது, நாடு முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தற்காலிக மருத்துவமனைகளை ராணுவம் அமைத்து வருவதாகவும், மக்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் ராணுவ மருத்துவமனைகளை நாடலாம் எனவும் பிரதமருக்கு நரவனே விளக்கம் அறித்தார்.

  Must Read :  தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!

   

  அத்துடன், இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் டேங்கர்களை எடுத்துச் செல்லப்படும் வாகனங்களை கையாளுவதற்கு திறன்மிகுந்த வீரர்களை பயன்படுத்தி வருவதாகவும் நரவனே பிரதமரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளன என்பது குறிப்படத்தக்கது.
  Published by:Suresh V
  First published: