கொரோனா பரவல்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவல்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பிரதமர் மோடி

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

  • Share this:
    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் முதல் அலை அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சில முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதனைத் தொடர்ந்து, இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த இருக்கிறார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Must Read :  மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

     

    கடந்த 6 ஆம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியான வாரங்களாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: