• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஊரடங்கு காலத்தில் மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி மேற்கொள்ளும் 5வது ஆலோசனை இதுவாகும்

  • Share this:
    கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

    ஊரடங்கு காலத்தில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மேற்கொள்ளும் 5வது ஆலோசனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையின் போது அனைத்து முதலமைச்சர்களும் பேச வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வருவதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை அவர் குறிப்பிட்டார்.

    மூன்றரை லட்சம் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்வதற்காக 350 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ராஜீவ் கவுபா தெரிவித்தார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: