• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஜூன் 16, 17-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஜூன் 16, 17-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, 6வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார்.

  • Share this:
    நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியது முதலே மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, 5 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம், ஜூன் 16 மற்றும் 17-ம் தேதிகளில் 6-வது முறையாக ஆலோசனை நடைபெறுகிறது. முதல் நாளான 16-ம் தேதி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாநிலங்களிடம் பிரதமர் கருத்துக்களை கேட்டறிகிறார்.

    இதேபோல, 17-ம் தேதி மதியம் 3 மணிக்கு தொடங்கும் ஆலோசனையில் பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    இதனிடையே, பிரதமர் உடனான ஆலோசனைக்கு முன்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 15ம் தேதி காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

    தமிழகத்தில் கொரோனா பரவல், பாதிப்பு நிலை, சிகிச்சை முறை குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், தமிழகத்தின் பாதிப்பு குறித்து பிரதமரிடம் தெரிவிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க...

    ஆசிரியர்கள் பேட்டி அளிக்கக்கூடாது: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு..

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: