கொரோனா போரில் ஐ.நா பங்கு? - பிரதமர் மோடி கேள்வி

கொரோனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா போரில் ஐ.நா பங்கு? - பிரதமர் மோடி கேள்வி
பிரதமர் நரேந்திர மோடி.
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 9:54 PM IST
  • Share this:
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது கூட்டத்தில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஐ.நா சபையின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்று கேட்டுக்கொண்டார். ஐ.நா சபையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இதற்காக இன்னும் எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார்.

Also read: புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு



ஐ.நா சபையில் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க குழுவில், இந்தியாவை இடம்பெறச் செய்வதில் என்ன தயக்கம் என்றும் பிரதமர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். கொரோனா காலத்தில் 150 நாடுகளுக்கு மருந்துகளை வழங்கி இந்தியா உதவியதாகவும், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மற்ற நாடுகளுக்கு வழங்குவோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading