Narendra Modi : சுகாதார உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த பிரதமர் மோடி உத்தரவு

Narendra Modi : சுகாதார உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த பிரதமர் மோடி உத்தரவு

பிரதமர் மோடி

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நாடு முழுக்க சுகாதார உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்றிரவு அவசர ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தின்போது நாடு முழுக்க ஆக்சிஜன் உற்பத்தி அளவு குறித்த தரவுகள் பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டது.

    அதன்படி கடந்தாண்டு ஆகஸ்டில் 5 ஆயிரத்து 700 மெட்ரிக்டன் அளவு ஆக்சிஜன் தயார் செய்யப்பட்டதாகவும், கடந்த 25ஆம் தேதி வரை 8 ஆயிரத்து 922 மெட்ரிக்டன்னாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றவும், ஆக்சிஜன் விரைவு ரயில்கள், இந்திய விமானப்படையை பயன்படுத்தி ஆக்சிஜன் எடுத்துச்செல்லவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், கொரோனா தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளின் மூலப்பொருட்களையும் தடையின்றி வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    Must Read : அசாமில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவு; வடகிழக்கு, வடக்கு வங்கமும் குலுங்கியது

     

    கொரோனா தொற்றால் அமெரிக்கா்கள் அவதிப்பட்டபோது, இந்தியா செய்த உதவிகளையும் பைடன் நினைவு கூர்ந்தார். மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளையும் இந்தியாவுக்கு அளிக்க உள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: