இம்ரான்கான் கொரோனாவிலிருந்து விரைவில் குணமடையவேண்டும் - பிரதமர் மோடி வாழ்த்து

பாக்.பிரதமர் இம்ரான் கான் - பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தொற்று கண்டறியப்பட்டதை அவரது சிறப்பு உதவியாளரான ஃபைசல் சுல்தான் டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். தொற்றை அடுத்து வீட்டிலேயே இம்ரான்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 18ம் தேதி சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான Sinopharm சினோஃபார்மை செலுத்திக் கொண்ட நிலையில் இம்ரான் கானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம்ரான் கான் விரைவில் குணமடைய விரும்புவதாக டிவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  பாகிஸ்தானில் சினோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிகா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் மற்றொரு தடுப்பு மருந்தான கன்சினோபயோ ஆகிய மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: