இந்தியா, இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு நன்றி...! டிரம்ப் நெகிழ்ச்சி ட்வீட்

இந்தியா, இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு நன்றி...! டிரம்ப் நெகிழ்ச்சி ட்வீட்
டிரம்ப் உடன் மோடி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: April 9, 2020, 8:56 AM IST
  • Share this:
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ததற்கு பிரதமர் மோடி மற்றும் இந்தியர்களுக்கு நன்றி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தடை செய்தது.

இதற்கிடையே, கொரோனாவால் 4 லட்சம் பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட, உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா, அதிக அளவில் இந்திய நிறுவனங்களிடம் ஆர்டர் செய்திருந்தது.


உலகளவில் 70 % ஹைட்ராக்ஸிகுளுரோகுயின் மாத்திரைகளை இந்தியாதான் தயாரித்து விற்பனை செய்கிறது. குஜராத்தில் உள்ள முக்கியமான 4 மருந்து நிறுவனங்கள் இதை பெரும்பான்மையாக தயாரிக்கின்றன. 200எம்ஜி, 400 எம்ஜி அளவுகளில் மாதத்துக்கு சராசரியாக 40 டன் மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது.

இந்தியா விதித்த தடை காரணமாக சிக்கல் எழுந்ததால், பிரதமர் மோடியிடம் தடையை விலக்க டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இந்திய தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஏற்றுமதிக்கான தடையும் விலக்கப்பட வில்லை.

இதனால், “ இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கான ஏற்றுமதித் தடையை விலக்காதது வியப்பளிக்கிறது. எதிர்காலத்தில் பதிலடி கொடுப்போம்” என டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதனை அடுத்து, மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்தது.இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், “2.90 கோடிக்கும் அதிகமான ஹைட்ராக்ஸிகுளுரோகுயின் மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அமெரிக்காவுக்கு வருகின்றன” என்று தெரிவித்தார்.



மேலும், இது தொடர்பாக டிரம்ப் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ அசாதாரண சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான கூட்டுறவு, ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இந்த உதவியை அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமைக்கும் நன்றி. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் செயல்பட்டதற்கு இந்தியப் பிரதமருக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading