• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தற்சார்புடன் இருக்க கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி!

தற்சார்புடன் இருக்க கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியாவின் கொரோனா கட்டுப்படுத்தலை உலகமே கவனிக்கிறது.

  • Share this:
    தற்சார்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு கற்றுக் கொடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள ஊராட்சி பிரதிநிதிகளுடன், டெல்லியில் இருந்தபடி, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்று நமது வாழ்க்கை முறையிலும், வேலை முறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

    கொரோனா தொற்று நமக்கு பல்வேறு சவால்களை விடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருப்பதாகவும் கூறிய பிரதமர் மோடி, தற்சார்புடன் நாம் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளதாக கூறினார்.

    மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா, தனிமனித இடைவெளியை பின்பற்றி கொரோனா தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே கவனித்து வருவதாகவும், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவால் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    மேலும், ஊராட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகளையும் கேட்டறிந்த மோடி, அவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் அறிவுறுத்தினார்.

    Also see....






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: