• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Black Fungus : கரும் பூஞ்சைத் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

Black Fungus : கரும் பூஞ்சைத் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கரும் பூஞ்சைத் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

  • Share this:
    கொரோனாவுக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேறு கலந்துரையாடினார். காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், வடகிழக்குப் பகுதி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிராந்தியங்களையும் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

    கொரோனா நோயாளிகளை கையாண்டதில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட மருத்துவர்கள், எந்த மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். மேலும், கரும் பூஞ்சைத் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினருடனும் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Must Read : தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு

     

    இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. 26 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக பதிவானது ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: