கொரோனாவுக்கு எதிராக போராடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்., அதனால் நல்ல விளைவுகளை பார்க்கிறோம் - உள்துறை அமைச்சர் அமித்ஷா

கொரோனாவுக்கு எதிராக போராடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்., அதனால் நல்ல விளைவுகளை பார்க்கிறோம் - உள்துறை அமைச்சர் அமித்ஷா

அமித்ஷா

குஜராத் அரசையும், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியையும் பாராட்டிப்பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மிக வேகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என பேசியுள்ளார்.

 • Share this:
  குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில், பல திட்டங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக அரசாங்கங்கள் போராடிய நேரத்தில், பிரதமர் மோடி நாட்டு மக்களை கொரோனாவுக்கு எதிராக போராடுமாறு அறிவுறுத்தியதாக பேசியிருக்கிறார்.

  காந்திநகர் மாவட்டத்தில் பல திட்டங்களை துவக்கி வைத்த அவர், “கொரோனா வைரஸ் காரணமாக நிர்வாகம் அப்படியே நின்றது. அந்த நேரத்தில்தான், குஜராத்தின் மைந்தனான பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸை எதிர்த்து போராடுமாறு மக்களை அறிவுறுத்தினார். அதனால் இப்போது நல்ல விளைவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.  மேலும் பேசிய அவர், “தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில், அனைவரும் முறையாக விதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

  குஜராத் அரசையும், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியையும் பாராட்டிப்பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மிக வேகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என பேசியுள்ளார்.
  Published by:Gunavathy
  First published: