கொரோனா: சிகிச்சையில் இருப்போரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

 • Share this:
  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களை விடவும் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  கொரோனா பரவல் குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களை விட, குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

  மேலும், சில நோயாளிகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சையும், வெண்டிலேட்டரும் தேவைப்படுவதாகவும் கூறினார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, ஒரு கோடிக்கும் மேற்பட்ட கவச உடைகளும், என் 95 மாஸ்குகளும் பல்வேறு மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: