ஹோம் /நியூஸ் /கொரோனா /

காரணமே இல்லாமல் பகைமையை கடைப்பிடிப்பதே கெட்டவர்களின் வழக்கமாக உள்ளது - பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி

காரணமே இல்லாமல் பகைமையை கடைப்பிடிப்பதே கெட்டவர்களின் வழக்கமாக உள்ளது - பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி

அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

நாட்டிற்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும், கொரோனாவிடம் இருந்து விடுதலை பெற சுதந்திர தினத்தில் சபதம் ஏற்போம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடிபேசும் 67வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, 21 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கார்கில் போரில் நமது ராணுவம் வெற்றி பெற்றதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தியாவின் தீரமிக்க ராணுவம் பாகிஸ்தானின் மோசமான திட்டத்தை முறியடித்தது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

  பாகிஸ்தானுடன் நல்லுறவை பேண இந்தியா விரும்பியது என்றும், ஆனால் உள்நாட்டு குழப்பங்களில் இருந்து திசைதிருப்ப இந்திய நிலத்தை அபகரிக்கும் மோசமான செயலை பாகிஸ்தான் மேற்கொண்டதாகவும் பிரதமர் சாடினார். எல்லோரிடமும் எந்த காரணமும் இல்லாமல் பகைமையை கடைப்பிடிப்பதே கெட்டவர்களின் வழக்கமாக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

  கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளதாகவும்,  பல நாடுகளை விட இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். லட்சக்கணக்காக உயிர்களை நம்மால் காப்பற்ற முடிந்தாலும், கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்றும் தெரிவித்தார்.  பல்வேறு பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் தொற்று பரவலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டி உள்ளது என்றும் அவர் கூறினார்.வருகிற சுதந்திர தினத்தன்று கொரோனாவிடம் இருந்து விடுதலை பெற சபதம் ஏற்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

  ரக் ஷா பந்தன் விழா நெருங்கி வரும் நிலையில் அதனை கொண்டாட பல்வேறு அமைப்புகள் தயாராகி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ரக் ஷா பந்தனை உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக பலர் பயன்படுத்தவிருப்பது மிகச்சிறப்பான நடவடிக்கை ஆகும் என்றும் அவர் கூறினார்.


  படிக்க: கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி

  படிக்க: சென்னையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி - தற்கொலை என நாடகமாடியது அம்பலம்

  படிக்க: நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ


  மாநகரங்கள், பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பிரபல பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற காலம் மாறி, தற்போது சிறு நகரங்கள், கிராமங்கள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

  தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் கனிகா, சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றதை குறிப்பிட்டு பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  Published by:Sankar
  First published:

  Tags: Mann ki baat, PM Modi