• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • PM Modi | கொரோனா மரணங்கள்: உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கிய பிரதமர் மோடி

PM Modi | கொரோனா மரணங்கள்: உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி!

பிரதமர் மோடி!

கொரோனாவினால் உயிரிழந்தவர்களை எண்ணி பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிவயப்பட்டார். வாரணாசியில் இன்று முன் களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தெரிவித்தார் மோடி.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா நம்மிடமிருந்து நிறையப் பேரை பறித்துவிட்டது, நெருக்கமானவர்களைக் கொண்டு சென்று விட்டது என்று உணர்ச்சிவயப்பட்டு கூறினார்.

    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் நிலவிவருகிறது. இந்நிலையில், பிரதமர் இன்று கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக தனது சொந்த தொகுதியான வாரணாசியின் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் உடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    கொரோனா இரண்டாவது அலையில் நாம் பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்த வைரஸ் நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது. அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கொரோனாவிற்கெதிரான நமது தற்போதைய போரில், கருப்புப் பூஞ்சை என்ற நெருக்கடியும் சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    இது நாம் பதட்டமில்லாமல் இருக்கும் தருணமல்ல. நாம் மிக நீண்ட அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும்.

    நீங்கள் வைரஸைக் கட்டுப்படுத்தியுள்ளீர்கள் ஆனால் இதனால் மெத்தனம் ஏற்பட்டு விடக்கூடாது இது ஒரு நீண்டகாலப் போராட்டமாக இருக்கும், என்றார் பிரதமர் மோடி.

    மேலும் புதிய முழக்கம் ஒன்றையும் இந்த தொலைமாநாட்டில் மோடி வெளியிட்டார், அதாவது “நோய்வாய்ப்பட்டவர்களின் வீடு தேடி வரும் சிகிச்சை” என்பதே அந்த புதிய முழக்கமாகும்.

    மேலும் அவர் கூறும்போது வாக்சின்களை விரயம் செய்யக் கூடாது ஒரு சிங்கிள் டோஸ் வாக்சின் விரயம் செய்யப்பட்டாலும் நோய் பாதித்த ஒருவருக்கான சிகிச்சை பாதிக்கப்படுகிறது என்று பொருள். எனவே வாக்சினை விரயம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி.

    ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்: தினசரி பாதிப்பு 2,59,591.

    இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,60,31,991

    கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,59,591

    இதுவரை குணமடைந்தோர்: 2,27,12,735

    கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,57,295

    கொரோனா உயிரிழப்புகள்: 2,91,331

    கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,209

    சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 30,27,925

    இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,18,79,503

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: