HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»pm modi cms to get vaccinated in phase 2 mut

2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், 50 வயது கடந்தோருக்கு கொரோனா தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் 19,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 151 பேர் பலியாகியுள்ளனர். தற்போது கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,92,308 என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், 50 வயது கடந்தோருக்கு கொரோனா தடுப்பூசி
மாதிரி படம்
  • Share this:

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கைத் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் 50 வயது கடந்தோர் ஆகியோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் புதிதாக 15,223 பேருக்குத் தொற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே, 6 லட்சத்து 10 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 151 பேர் பலியாகியுள்ளனர். தற்போது கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,92,308 என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 1,52,869 ஆக உள்ளது. கேரளாவில் தற்போது 70,841 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்ட்ராவில் அடுத்தபடியாக 49,615 கேஸ்கள் உள்ளன.

இதுவரை முதற்கட்ட தடுப்பூசி நடவடிக்கையில் நாட்டில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 484 பேருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் தகவல்களின் படி 18 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரத்து 782 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

இன்று கொரோனாவுக்கு எதிரான போரைத் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ளது என்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன். கோவிஷீல்ட் வாக்சின் மகாராஷ்ட்ராவிலிருந்து பங்களாதேஷுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தடுப்பூசியின் 2ம் கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர், 50 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்கும் 2ம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.
Published by:Muthukumar
First published: