சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைப் பெற்று வருபவர் உடல்நிலையில் முன்னேற்றம்

பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சிக்கான அனுமதி தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைப் பெற்று வருபவர் உடல்நிலையில் முன்னேற்றம்
ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ‘ப்ளாஸ்மா’. (கோப்புப் படம்)
  • Share this:
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கான சோதனைகள் நடத்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கும், வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து குணமடைந்து திரும்பிய எட்டு பேர் பிளாஸ்மா தானம் அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் சென்னையைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா, சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா தானம் அளிக்கும் நபர் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவராக இருக்க வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருமுறை நெகடிவ் வந்திருந்தால் குணமடைந்து 28 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.


28 நாட்கள் முன்பு தானம் பெறப்பட்டால் இரண்டு முறை பி.சி.ஆர் பரிசோதனை நெகடிவ் வந்திருக்க வேண்டும். அறிகுறிகள் இல்லாமல் 28 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல், 55 கிலோ எடைக்கு மேல் இருக்க வேண்டும்.

மேலும், குழந்தை பெற்றிருக்காத பெண்கள் மட்டுமே தானம் அளிக்க முடியும். எச்.ஐ.வி, மலேரியா உள்ளிட்ட நோய்த் தொற்று பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட வேண்டும்.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படும். ரத்தத்திலிருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்படும் மற்ற ரத்தக் கூறுகள் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். பல்வேறு நபர்களிடம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்மா ஒன்றாக சேமிக்கப்படாது.இந்த பிளாஸ்மா 18 வயதுக்கு மேலான கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு. அதுபோல, ரத்தக் கூறுகளுக்கு ஏற்கெனவே ஏதேனும் அலர்ஜி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். கர்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட மாட்டாது.










Also see:
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading