இரண்டு நாட்களாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று: சமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதின் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. கவனமாக இருக்கவேண்டும் என நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று: சமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
பினராயி விஜயன்
  • Share this:
”ஒரு நாளில் 339 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதின் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. கவனமாக இருக்கவேண்டும்” என நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பூந்துறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மக்கள் வீட்டுக்குள் கவனமாக, விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நோய் பாதிக்கப்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 74 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 133 பேருக்கு நோய் பரவி உள்ளது. இவர்களில் 7 பேருக்கு எப்படி நோய் பரவியது என்று தெரியவில்லை. இன்று தலா ஒரு ராணுவ வீரர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரருக்கும், 6 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது எனவும் அவர் நேற்று தெரிவித்தார்.


இது முக்கியமான காலகட்டம் கவனமாக இருங்கள். கூட்டம் கூடுவதை முழுவதுமாக தவிர்த்து அரசுடன் ஒத்துழையுங்கள் என கேட்டுக்கொண்டார்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading