கொரோனாவுக்கு எதிரான போரில் உதவிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானி.. இங்கிலாந்து பிரதமர் விருது வழங்கி பாராட்டு

இங்கிலாந்து பிரதமர் விருது வழங்கி பாராட்டு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானி ஜஸ்பல் சிங் இங்கிலாந்து அரசு வழங்கியுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தானாக முன்வந்து விமானம் இந்தியா கொண்டுவந்துள்ளார். அவரது செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

  • Share this:
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் உள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. பலரும் ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அப்படி அழைத்து வரப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதிகள் கிடைப்பதில்லை.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல உயிர்கள் பலியாகும் செய்தி மக்களை கலக்கமடையச் செய்துள்ளது. பற்றாக்குறையை போக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.பல இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அது போதுமானதாக இல்லை. இதனையடுத்து பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்து நாடு சார்பாக 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கல்சா எய்டு இண்டர்நேஷனல் (Khalsa Aid International) என்று தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த நிறுவனம் ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்தியாவில் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

ALSO READ : கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும்?: தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள்

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானி ஜஸ்பல் சிங் இங்கிலாந்து அரசு வழங்கியுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தானாக முன்வந்து விமானம் மூலம் இந்தியா கொண்டுவந்துள்ளார். அவரது செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  ’பாயிண்ட்ஸ் ஆப் லைட்ஸ்’ என்ற விருதை ஜஸ்பல் சிங்கிற்கு வழங்கியுள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஜஸ்பல்லின் பங்கு அளப்பரியது என பாராட்டியுள்ளார். மேலும் இங்கிலாந்து மக்கள் முன்வந்து இந்தியாவிற்கு உதவ வேண்டும் எனவும் , இந்தியாவுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ALSO READ : தள்ளுவண்டியில் முட்டை திருடிய தலைமை காவலர்..வீடியோ வைரலான நிலையில் சஸ்பெண்ட்

இதுகுறித்து ஜஸ்பல் சிங், கொரோனாவினால் இந்தியா அடைந்துள்ள துயரமான நிலையை பார்த்த போது, தன்னால் இயன்ற வரை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக கூறினார். மேலும் இங்கிலாந்து மக்களின் உதவி மனப்பான்மைக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். அரசு மட்டுமல்ல, இப்படியான தன்னார்வலர்கள் தாமாக முன் வந்து உதவினால் தான் இந்தியா கொரோனாவை எளிதில் வெற்றிக்கொள்ள இயலும்.

 

  

கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை தாக்கி ஆக்ஸிஜன் அளவை குறைக்க செய்கிறது. இந்நிலையில் ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவியானது காற்றில் இருந்து ஆக்ஸிஜன் சேகரிக்கும் கருவியாகும். இதனை குழாய் மூலம் மூக்கின் வழியாக செலுத்தும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.

ALSO READ : இ- பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? எத்தனை பேர் வாகனங்களில் செல்ல அனுமதி?

ஆனாலும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும் என்பதால் இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெரிதும் பயன்படாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் பாதிப்பு துவக்க நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மிகுந்த பயனை அளிக்கிறது. ஆனாலும் அதுவும் தற்போதைய நிலையில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: