தனிமைப்படுத்தப்பட்டவர்களை புறக்கணிக்காதீர்கள் - அரசின் பிரச்சாரம் தேவை..! - பைலட் மோகன் தாஸ்

தனிமைப்படுத்தப்படுபவர்களிடம் இருந்து விலகியிருந்தால் போதும், பாகுபாடும், புறக்கணிப்பும் காட்டத்தேவையில்லை என்பதை அரசு பிரச்சாரம் செய்யவேண்டும்

தனிமைப்படுத்தப்பட்டவர்களை புறக்கணிக்காதீர்கள் - அரசின் பிரச்சாரம் தேவை..!  - பைலட் மோகன்  தாஸ்
தனிமைப்படுத்தல் பதாகை
  • Share this:
’’எனக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லை. பெங்களூர், கொச்சி, சென்னை என மூன்று விமான நிலையத்திலும் தெர்மல் ஸ்கீரினிங்கிற்கு உட்படுத்தப்பட்டேன். என்னுடைய பயண விபரம் மாவட்ட நிர்வாகத்திற்கு கவலையை தந்ததால் என்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள்.

எனது குடும்பம் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகிறது. எங்களை எப்படி காப்பாற்றுவீர்கள்?’’என கேள்வியெழுப்பியுள்ளார் விருதுநகரைச் சேர்ந்த விமானி மோகன்தாஸ்.

"இவ்வளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வெளிநாட்டிற்கும் செல்லவே இல்லை. மாநிலங்களுக்கிடையேயான பயண வரலாறு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் தனிமைப்பட்டிருந்தாலும், சுற்றி இருக்கும் கிராம மக்களின் அணுகுமுறை மன உளைச்சல் அளிக்கிறது” என்று தெரிவித்தார் மோகன்தாஸ்.நியூஸ் 18 தமிழ் தளத்துக்கு அவர் பேசுகையில், ”நான் தமிழக அரசிடமும், முதலமைச்சரிடமும், சுகாதரத்துறை அமைச்சரிடமும் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. தனிமைப்படுத்தப்படுபவர்களிடம் இருந்து விலகியிருந்தால் போதும், பாகுபாடும், புறக்கணிப்பும் காட்டத்தேவையில்லை என்பதை அரசு பிரச்சாரம் செய்யவேண்டும். எனக்கு பரிசோதனை செய்து முடிவு அறிவிக்கப்படும் வரையில் நான் தனிமைப்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading