கோவிட்-19 : கட்டிப்பிடித்து கண்ணீருடன் மருத்துவருக்கு நன்றி தெரிவித்த தொற்றிலிருந்து மீண்ட மூதாட்டி!

கட்டிப்பிடித்து கண்ணீருடன் மருத்துவருக்கு நன்றி தெரிவித்த மூதாட்டி!

இந்த மோசமான சூழலுக்கு மத்தியில், நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சில சம்பவங்களை அவ்வப்போது சோஷியல் மீடியாக்கள் நமக்கு கண்முன்னே காட்டி வருகின்றன

  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி தொற்று பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த மோசமான சூழலுக்கு மத்தியில், நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சில சம்பவங்களை அவ்வப்போது சோஷியல் மீடியாக்கள் நமக்கு கண்முன்னே காட்டி வருகிறது. சமீபத்தில் மக்களின் மனங்களை நெகிழ வைக்கும் வகையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் புகைப்படம் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட பலவற்றில் வைரலாகி மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளது.

கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சமீபத்தில் மீண்ட ஒரு வயதான மூதாட்டி, PPE kit எனப்படும் கவச உடை அணிந்திருக்கும் ஒரு மருத்துவரை கட்டிப்பிடித்து கண் கலங்கும் புகைப்படம் தான் அது. இந்த புகைப்படம் கொல்கத்தாவில் உள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையையில் எடுக்கப்பட்டது. அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கோவிட் -19 பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து உள்ளார்.

மக்களின் மனங்களை வென்ற இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் யூஸரான தன்மோய் டே (Tanmoy Dey) ஷேர் செய்துள்ளார். அவர் ஷேர் செய்துள்ள புகைப்படத்தில் இருக்கும் அந்த மூதாட்டி வயதான
கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்ட 10 நாட்களுக்கு பிறகு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை கட்டிப்பிடிப்பதைக் காணலாம். கொடிய வைரஸை எதிர்த்து போராட சிகிச்சை அளித்து உறுதுணையாக இருந்த மருத்துவருக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதுமானதாக இருக்காது என்பதால், மருத்துவரை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த அந்த மூதாட்டியின் கண்களில் கண்ணீர் இருக்கிறது.

இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ள தன்மோய் டே, "கோவிட்-19 தொற்றுடன் போராடிய பின் 75 வயதான இந்த பாட்டி குணமடைந்து வீட்டிற்கு சென்றார். இவர் வீட்டிற்கு கிளம்பும் போது, கொடூர தொற்றுக்கு எதிராக போராட உதவி நல்ல தரமான சிகிச்சை அளித்து தன் உயிரை மீட்டு தந்த டாக்டரைக் கட்டிப்பிடித்து, கண்ணீர் மல்க அன்போடு ஆசீர்வதித்தார். இதை விட அழகான புகைப்படம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

https://www.facebook.com/photo.php?fbid=228794862377159&set=a.155855439671102&type=3

இது போன்ற புகைப்படங்கள் தான் தொற்றுக்கு எதிரான போரில் உயிரை துச்சமாக மதித்து ஈடுபட்டுள்ளோருக்கு உத்வேகம் மற்றும் உற்சாகத்தை அளிக்கின்றன" என்று கருத்து பதிவிட்டுள்ளார். இதனிடையே புகைப்படத்தில் கவச உடையில் இருந்த அந்த மருத்துவர் அவிசிக்தா மல்லிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து வைரலாகி ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

ஒரு வருடத்திற்கும் மேலாக வைரஸை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவர்களின் முயற்சிகளுக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். ஒரு யூஸர் மருத்துவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்; அவர்களுக்கு நன்றி" என்றும் மற்றொரு யூஸர், "இது உண்மையிலேயே பாராட்டத்தக்கது, டாக்டர்களுக்கும், கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் அனைத்து ஊழியர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட பணிகளை செய்வதற்காக நன்றி தெரிவிக்க வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. உங்கள் அனைத்து ஆதரவிற்கும் நன்றி, நீங்கள் அனைவரும் இல்லாமல் இது சாத்தியமில்லை, நன்றி என்று கூறி உள்ளார்.
Published by:Arun
First published: