கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அறிவித்த நாடு

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அறிவித்த நாடு
(கோப்புப் படம்)
  • Share this:
மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் போனாலும், கொரோனாவை எதிர்த்துப் போரிட அவர்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பதும் அவசியம் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா பரவலக் கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுவரை இணையதளம் மூலமாகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பிலிப்பைன்சில் வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் வகுப்புகள் ஏப்ரல் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க...

72 மணி நேரத்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading