Pfizer Vaccine | கொரோனா தடுப்பு மருந்து கிறிஸ்துமஸுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வரும் - ஃபைசர் நிறுவனம் தகவல்..

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் medicineம் தயாரித்து வரும் தடுப்பு மருந்து கிறிஸ்துமசுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • Last Updated: November 20, 2020, 10:20 AM IST
  • Share this:
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸின் 2-ஆம் அலை மிக மோசமாக தாக்கி வருகிறது. அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,73,768 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலை காரணமாக பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வந்து ஆறுதலை தந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்து 95 சதவிகிதம் பலன் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தடுப்பு மருந்து சோதனைக்காக 43,000 பேர் தன்னார்வலர்களாக பங்கேற்றனர். இதில் 3.8 சதவிகிதம் பேருக்கு லேசான மயக்கமும் 2 சதவிகிதம் பேருக்கு லேசான தலைவலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பக்கவிளைவுகள் பெரிதாக இல்லாததைத் தொடர்ந்து அமெரிக்காவில் அவசரப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கோரி, அந்நாட்டின் உணவு மற்றும் மருத்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்படும் என பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க.. தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு



அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் டிசம்பர் முதல் வாரத்தில் ஆலோசனை நடத்தி அனுமதி அளிப்பார்கள் என தெரிகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021- ஆம் ஆண்டு 130 கோடி தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading