Home /News /coronavirus-latest-news /

இந்த மாத இறுதிக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி

இந்த மாத இறுதிக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி

Pfizer

Pfizer

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்த மாதம், அதாவது பிப்ரவரி மாத இறுதிக்குள் கிடைக்கக்கூடும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி, பிப்ரவரி இறுதிக்குள் கிடைக்கும். Pfizer நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசியைத் தயாரிக்கிறது என்றும், வரவிருக்கும் வாரங்களில் மதிப்பாய்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றிய விவரங்கள் இங்கே.

    Pfizer Inc மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த BioNTech SE ஆகிய இரண்டு நிறுவனங்களும் செவ்வாய் கிழமையன்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசி பிறந்து ஆறு மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான, அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கக் கோரி ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    பெரியவர்களுக்கு. பல்வேறு நிறுவனங்களும் கோவிட் வைரஸில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக தடுப்பூசியை உற்பத்தி செய்து, செலுத்தி வரும் நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எழுந்த கேள்விக்கு விடையாக Pfizer நிறுவனம் கொரோனா தடுப்பூசியை அங்கீகரிக்க மனு அளிக்கவுள்ளது. இதன் அடிப்படையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்த மாதம், அதாவது பிப்ரவரி மாத இறுதிக்குள் கிடைக்கக்கூடும். தடுப்பூசி பற்றிய தரவை கட்டுப்பாட்டாளர்கள் மதிப்பாய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு மருந்து நிறுவனங்களை FDA வலியுறுத்தியது என்று சமீபத்தில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

    Also read:  கூண்டோடு டிரான்ஸ்பர் பண்ணிடுவேன்... பொதுமக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத போலீசை வாக்கி டாக்கியில் எச்சரித்த காவல் ஆணையர்

    இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மருந்து ஆய்வு நிறுவனங்களிடம் கேட்கப்பட்ட போது, Pfizer, பயோஎன்டெக் மற்றும் எஃப்டிஏ ஆகிய எந்த நிறுவனமும் உடனடியாக எந்த பதிலையும் வழங்கவில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் மதிப்பாய்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை வரும் ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கலாம் சில வாரங்களுக்கு முன்னதாக Pfizer நிறுவனம் தெரிவித்தது. ஆனால், இந்தத் தடுப்பூசி அமெரிக்காவில் தான் தற்போது கிடைக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    Must Read : மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக

    இந்தியாவை பொறுத்தவரை 18 வயதுக்கு, மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு கோடிக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போது முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது . அதைத் தொடர்ந்து 15 – 18 வயதுக்குட்பட்ட டீனேஜர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளின் மூலம் கோவிட் வைரஸ் முதல் டோஸ் சில வாரங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசியைப் பற்றி எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக இல்லை. ஆனாலும், கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கும் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானயை விரைவில் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona Vaccine, Pfizer

    அடுத்த செய்தி