கொரோனா பரவல் இன்னும் பல நாடுகளில் ஓய்ந்தபாடில்லை. இதுவரை உலகில் 15,28,037 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,617ஆக உள்ளது, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,90,432ஆக உள்ளது. அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் பாதிக்கப்பட்டோர் மொத்தம் 87,600ஆகவும் உயிரிழந்தோர் 341 என்கிற அளவிலும் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இங்கிலாந்தில் சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டது.
Also read: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,366 பேருக்கு கொரோனா பாதிப்பு
அந்த தடுப்பூசிக்கு உலகத்திலேயே முதல் நாடாக இங்கிலாந்து ஒப்புதல் வழங்கியது. அடுத்த வாரம் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்காக வரும் என தெரிவித்திருந்தது. இங்கிலாந்தைத் தொடர்ந்து பக்ரைன் நாட்டிலும் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்