காலை 9 முதல் மதியம் 2 வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை - கட்டுப்பாடு விதிக்கக் கோரும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம்

காலை 9 முதல் மதியம் 2 வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை - கட்டுப்பாடு விதிக்கக் கோரும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம்
ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்
  • Share this:
தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசியத் தேவைப் பொருள்களுக்கான கடைகள் இயங்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், பெட்ரோல் பங்குகள் இயங்கிவருகின்றன. இந்தநிலையில், இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி அனுப்பியுள்ள கடிதத்தில், அவசியமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்புவதை தடுப்பதற்கு நேரக் கட்டுப்பாடு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார். பால், காய்கறி, அவசர ஊர்தி, அரசு சேவைகள் உள்ளிட்ட பிற சேவைகள் 24 மணிநேரம் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also see:


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்