முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் கிடையாது - பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

பெட்ரோலிய விற்பனையாளர்களின் இந்த அறிவிப்பால் சேலத்தில் முகக் கவசம் அணியாதோர் பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் கிடையாது - பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 37 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Share this:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் பெட்ரோல் பங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பெட்ரோலிய விற்பனையாளர்களின் இந்த அறிவிப்பால் முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படுகிறது. சேலத்தில் முகக் கவசம் அணியாதோர் பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

 
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading