Corona Awareness : தொலைக்காட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

கொரோனா வைரஸ்

கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்படி உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  • Share this:
    அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கொரோனா தொற்றும், அதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கு காரணமாக மக்கள் தீவிரமான மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சக மனிதர்களால் புறக்கணிக்கப்படுவதால், கொரோனா தொற்று பாதித்தவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்குவதாகவும், சமூக வலைதளங்களில் கொரோனா பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா குறித்த உண்மை தகவல்களை இணையதளங்களில் வெளியிட்டால் மட்டுமே மக்கள் மனதில் உள்ள அச்ச உணர்வை போக்க முடியும் என்பதால், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கொரோனா குறித்த அறிவுரைகள், தடுப்பூசி, சிகிச்சை, உணவு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

    Must Read : அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

     

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Suresh V
    First published: