பெருவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,455 ஆக உயர்ந்தது. அதற்கு காரணம் இதுவரை இறப்பு எண்ணிக்கை சரியாக கணக்கிடப்பாடாததே காரணம் என்று அந்நாட்டு அதிபர் மார்ட்டின் விஸ்காரா தெரிவித்துள்ளார்.
பெருவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை குறைத்து கூறப்படுவதாக புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அங்கு பிராந்தியங்களில் சுகாதாரத்துறை வைத்திருந்த பதிவுகளுக்கும், சுகாதார அமைச்சகம் வைத்திருந்த பதிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பெருவின் அதிபர் மார்ட்டின் விஸ்காரா தொற்று நோயின் திடீர் தீவிரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.