கொரோனா நோயுடன் பணிக்குச் சென்ற நபரால் 7 பேர் பலியான சோகம், 300 பேர் தனிமை: தொடரும் அமெரிக்கத் துயரம்

கொரோனா நோயுடன் பணிக்குச் சென்ற நபரால் 7 பேர் பலியான சோகம், 300 பேர் தனிமை: தொடரும் அமெரிக்கத் துயரம்

கொரோனா

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் தனக்கு கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பது தெரிந்தே பணிக்க்குச் சென்ற நபரால் ஏழு பேருக்கு நோய்த்தொற்றி மரணமடைந்தது கடும் துயரங்களை கிளப்பியுள்ளது.

 • Share this:
  அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் தனக்கு கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பது தெரிந்தே பணிக்க்குச் சென்ற நபரால் ஏழு பேருக்கு நோய்த்தொற்றி மரணமடைந்தது கடும் துயரங்களை கிளப்பியுள்ளது.

  மேலும் இதனால் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  டக்ளஸ் கவுண்ட்டி அதிகாரிகள் இது தொடர்பாக கூறும்போது, பிற்பாடு கொரோனா பாசிட்டிவ் உறுதியான நபர் கொரோனா நோய் அறிகுறிகளுடன் பணிக்குச் சென்றார். இதன் மூலம் பரவிய கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.

  இதனையடுத்து ஒரேகான் மாகாணத்தில் ஒரே இடத்தைச் சேர்ந்த 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நபர் பணி செய்த நிறுவனத்தின் பெயரை அதிகாரிகள் வெளியிட விரும்பவில்லை. வைரஸை பிறருக்குக் கடத்திய நபரின் பெயரையும் அவர் வெளியிட விரும்பவில்லை.

  ஒரேகானில் இதுவரை கொரோனாவுக்கு 1,347 பேர் பலியாகி உள்ளனர், மொத்தம் 103,755 பேர் கொரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  ஒரேகான் மாகாணத்தின் ஜனநாயகக் கட்சி கவர்னர் மார்ச் 3, 2021 வரை அவசரநிலைப் பிரகடனத்தை நீட்டித்துள்ளார். கடும் கட்டுப்பாடுகளை இவர் விதித்ததையடுத்து லாக் டவுன் எதிர்ப்புப் போராட்டங்கள் அங்கு எழுந்தன.

  பல பணியிடங்களில் கண்டிப்பான கண்காணிப்பு நடைமுறை இருந்தும் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியவில்லை. இறைச்சி பேக் நிலையங்கள், பண்டகசாலைக, மளிகை கடைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், நகர ஹால்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

  பெரிய அளவில் திருமணம், கேளிக்கை விருந்தில் மட்டுமே கொரோனா பரவலடையும் என்று அர்த்தமல்ல, தனிநபர் வைரஸைச் சுமந்து சென்றால் அவரும் சூப்பர் ஸ்ப்ரெடர்தான் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: