ஹோம் /நியூஸ் /கொரோனா /

சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து பேசினால், இப்படி கேட்கிறதா? ஆய்வில் கண்டுபிடிப்பு..

சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து பேசினால், இப்படி கேட்கிறதா? ஆய்வில் கண்டுபிடிப்பு..

சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்த நபர் பேசுவதை தெளிவாக கேட்கமுடியும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்த நபர் பேசுவதை தெளிவாக கேட்கமுடியும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்த நபர் பேசுவதை தெளிவாக கேட்கமுடியும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஒருமுறை பயன்படுத்திய பிறகு அப்புறப்படுத்தப்படும் சர்ஜிக்கல் முகக்கவசங்களை  அணிந்த ஒருவர் பேசும்போது, அவர் என்ன பேசுகிறார் என்பது தெளிவாக கேட்கமுடியும்.  பல்வேறு வகையான முகக்கவசங்கள் பேச்சின் ஒலியியலை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 

  அமெரிக்காவின் தி ஜர்னல் ஆப் தி அக்கியூஸ்டிகள் சொசைட்டி ஆப் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், மருத்துவ முகக்கவசங்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை முகக்கவசங்கள், வாயில் தெளிவான பிளாஸ்டிக் ஜன்னல்கள் கொண்ட முகக்கவசங்கள், வெவ்வேறு துணி வகைகள் மற்றும் பல அடுக்குகளை கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் கடையில் வாங்கிய துணி முகக்கவசங்கள் ஆகியவற்றை  ஆராய்ச்சி குழு ஆய்வு செய்தது.

  இந்த ஆய்வுக்காக மனித தலையைப் போன்ற ஒரு சிறப்பு ஒலிபெருக்கியைப் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். அந்த ஒலி பெருக்கியில் இருந்து மனிதர்கள் பேசும் வார்த்தைகள் ஒழிக்கப்பட்டது. மேலும் அதன் வாய் பகுதி பலவகை முகக்கவசங்களால் மூடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது குறித்து  அமெரிக்காவின் அர்பானா-சாம்பேனில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் கோரே என்பவர் கூறியதாவது, "நாங்கள் வெவ்வேறு முகக்கவசங்களை தலை வடிவ ஒலிபெருக்கியில் வைத்து ஒவ்வொரு சோதனைக்கும் ஒரே ஒலியை வாசித்தோம். 

  எங்கள் தரவுகளில் ஒரு திசைக் கூறுகளைச் சேர்க்க ஸ்பீக்கரை ஒரு டர்ன்டேபிள் மீது வைத்தோம். அதேசமயம், முகக்கவசங்கள் அணிந்த நபர்கள் பேசும் போது பெறப்படும் ஒலி அளவு தரவுகளையும் எங்கள் குழு சேகரித்தது. இந்த இரண்டு தரவுத் தொகுப்புகள் சற்று வித்தியாசமாக இருந்தாலும், எந்த வகையான முகக்கவசங்களால், ஒலி அதிர்வெண்கள் பாதிக்கப்படுகின்றன என்பதையும், எந்த வகையான முகக்கவசங்கள் வலுவான விளைவுகளைக் காட்டுகின்றன என்பதையும் இரண்டு தரவு தொகுப்புகளும் தெளிவாக விளக்கியுள்ளன" என தெரிவித்தார்.

  அதில், ஒரு நபர் மெய்யெழுத்துக்களை உச்சரிக்கும் போது உருவாக்கப்படும் அமைதியான, உயர் அதிர்வெண் ஒலியை அனைத்து முகக்கவசங்களும் குழப்புகின்றன என்பதை ஆய்வின் தரவு சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து கோரே கூறியதாவது, அந்த ஒலிகள் ஏற்கனவே காது கேளாதவர்களுக்கு, முகக்கவசங்களுடன் இருக்கும்போதோ அல்லது அணியாமல் இருக்கும்போதோ ஒரு சவாலாக இருக்கின்றன. மேலும் நீங்கள் பல அடுக்குகளை கொண்ட மாஸ்குகளை அணியும்போது காது கேளாமை இல்லாதவர்களுக்கு கூட அந்த வார்த்தைகள் ஒரு சவாலாக மாறும்" என்று கூறினார். 

  முகக்கவசங்கள் முகபாவனை மற்றும் உதடு இயக்கம் போன்ற காட்சி குறிப்புகளைத் மறைகின்றன. எனவே பெரும்பாலான முகக்கவசங்களை அணியும்போது ஸ்பீச் ரீடிங் இனி ஒரு விருப்பமாக இருக்காது. கேட்கும் திறன் இல்லாதவர்கள் உட்பட கிட்டத்தட்ட எல்லோரும் ஸ்பீச் ரீடிங்கை ஓரளவிற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் ஒரு முறை பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் அணிந்த நபர்களை பரிசோதித்ததில், அவை சிறந்த ஒலி செயல்திறனை வழங்குகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  அதேபோல தளர்வாக நெய்த 100 சதவீத பருத்தி முகமூடிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் மற்ற இல்லினாய்ஸ் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் காட்டப்பட்டுள்ளபடி, அவை சுவாச துளிகளைத் தடுப்பதில் அறுவை சிகிச்சை முகமூடிகளைப் போல பயனுள்ளதாக இருக்காது என்று கூறப்படுகிறது. இறுக்கமாக நெய்த பருத்தி மற்றும் கலந்த துணிகள் அதிக நீர்த்துளிகளைத் தடுக்கக்கூடும் என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. 

  ஆனால் அவை அதிக ஒலியைத் தடுக்கின்றன. மேலும், நீர்த்துளி ஆய்வின் அடிப்படையில், தளர்வாக நெய்த பருத்தியால் செய்யப்பட்ட மல்டிலேயர் முகமூடிகள் நீர்த்துளி-தடுக்கும் திறன் மற்றும் ஒலி செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமரசத்தை வழங்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். குறிப்பாக ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான முககவசங்கள் ஒலியை முற்றிலுமாகத் தடுக்காது. ஆனால் அவற்றை புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Corona, Mask, Surgical Mask