உணவகங்கள், மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி - தமிழக அரசு

உணவகங்கள், மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி - தமிழக அரசு
கோப்பு படம்
  • Share this:
உணவகங்கள் மளிகை கடைகள் இயங்குவதற்கு நேர வரம்பு ஏதுமில்லை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா தாக்கத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாமென்று போலீசார் அவர்களுக்கு அறிவுரைகளும் கூறிவருகின்றனர்.


ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் உணவங்கங்கள் பெரும்பாலும் மூடியிருப்பதால் உணவிற்கு அதை சார்ந்து இருந்தவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உணவங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்