அதிகரிக்கும் கொரோனா பரவல்... ஊரடங்கு தான் தீர்வா?

அதிகரிக்கும் கொரோனா பரவல்... ஊரடங்கு தான் தீர்வா?

பொது முடக்கம்(மாதிரிப் படம்)

தமிழ்நாடு அரசின் சிறப்பு வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் பிரப்தீப் கவுர் அவசியமற்ற பணிகளுக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை விட தீவிர கட்டுப்பாடுகள் கடைப்பிடித்தால்தான் பாதிப்பு குறையும் என கூறுகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் ஊரடங்கு தான் ஒரே தீர்வு என சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மருத்துவர்கள், நிபுணர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட மிக வேகமாக கொரோனா அதிகரித்து வருகிறது. எனினும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால் பலனில்லை என்கிறார் மருத்துவர் அஷ்வின். ஊரடங்கு போட்டால் பாதிப்பு சட்டென்று சில தினங்களுக்கு குறையும். ஆனால் ஊரடங்கு தளர்வுகள் வழங்கிய பிறகு மீண்டும் பாதிப்பு அதிகரிக்கும். எனவே தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்துவதே தீர்வு. அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிப்பது தான் பாதிப்பை குறைக்கும் என்கிறார்.

தமிழ்நாட்டில் இப்போதுள்ள நிலைமை தொடர்ந்து நீடித்தால் கண்டிப்பாக ஊரடங்கு தேவைப்படும் என்கிறார் மருத்துவர் அருணாசலம். இப்போது நிலைமைக்கு முழு ஊரடங்கு தேவை இல்லை என்றாலும் மகாராஷ்ட்ரா போன்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம். முக கவசம் அணிந்து கொள்வது போன்ற சிறந்த வழி எதுவும் இல்லை. ஆனால் மக்கள் அலட்சியமாக இருந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தேவைப்படும் என்கிறார்.

தமிழ்நாடு அரசின் சிறப்பு வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் பிரப்தீப் கவுர் அவசியமற்ற பணிகளுக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை விட தீவிர கட்டுப்பாடுகள் கடைப்பிடித்தால்தான் பாதிப்பு குறையும் என கூறுகிறார்.

மூன்று மாதங்களுக்கு கூட்டம் கூடும் எந்த நிகழ்ச்சியும் திட்டமிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். ஒரு புறம் அரசு 50% இருக்கைகளுடன் அரங்குகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அரசு கூறுவதை விட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்துகிறார்.

Also read... இடம் மாறாத காந்தி சந்தை வியாபாரிகள்... திருச்சியில் தொடரும் குழப்பம்

கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட உச்ச பாதிப்பான 2100 என்ற எண்ணிக்கையை சென்னை இப்போதே கடந்து விட்டது. மேலும் சில நாட்களுக்கு எண்ணிக்கை அதிகரிக்க தான் போகிறது. இதே நிலை தொடர்ந்தால் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு உயிர்களை இழக்க நேரிடும்.

இந்நிலையில் எப்போதும் போல் இயல்பு வாழ்க்கையை நாம் வாழ நினைப்பது சரியல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் போடப்பட்ட இரண்டு வார ஊரடங்கு காரணமாக ஜூலை இரண்டாம் வாரம் முதல் பாதிப்புகள் குறையத் தொடங்கின என குறிப்பிடுகிறார். மேலும் பொருளாதாரத்தை பாதிக்காமல் அவசியமற்ற பணிகளை மட்டும் தவிர்த்து முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்தால் பாதிப்பு குறையும் என்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: