Home /News /coronavirus-latest-news /

நடக்க முடியாத ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவி: காவல்துறை அதிகாரிக்குக் குவியும் பாராட்டு...!

நடக்க முடியாத ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவி: காவல்துறை அதிகாரிக்குக் குவியும் பாராட்டு...!

மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரின் மனிதநேயத்தை கண்டு வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய கோட்டக்குப்பம் காவல் அதிகாரியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி அஞ்சலாட்சி. இவர் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் தற்போது ஊரடங்கை முன்னிட்டு உணவின்றி அவர் தவித்து வந்துள்ளார்.இது குறித்து கேள்விப்பட்ட கோட்டக்குப்பம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தனது சொந்த செலவில் ஒரு மாதத்துக்கு தேவையான காய்கறி, அரிசி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

    இந்த உதவியை வானூர் காவல் அதிகாரிகளிடம் கொடுத்து நேரில் சென்று கொடுக்கும்படி கோரியதை தொடர்ந்து வானூர் உதவி ஆய்வாளர்கள் ஏழுமலை, ரவி ஆகியோர் மூதாட்டி அஞ்சலாட்சி வீட்டுக்கே சென்று அனைத்து பொருளும் தந்து விட்டு மூதாட்டியிடம் நலம் விசாரித்தனர்.

    சம்பவத்தைக் கேள்வி பட்ட அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரின் மனிதநேயத்தை கண்டு வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Also see...

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Pondicherry, Villupuram

    அடுத்த செய்தி