புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
- News18 Tamil
- Last Updated: July 14, 2020, 4:08 PM IST
புதுச்சேரியில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் அரசானது மருத்துவ சேவையை அதிகரிக்க புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளது.
இதனால் வில்லியனூர் அருகே உள்ள பத்துகண்ணு பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்ற வலியுறுத்தினர்.
மேலும் இதனை கண்டிக்கும் வகையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் கொரோனா நோயானது பரவாது என்றும் அங்கு பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் பொது மக்களுக்கு எடுத்துக்கூறினர். மேலும் படிக்க...: தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசு - வைகோ கண்டனம்
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். திடீரென பொதுமக்கள் சாலையில் அமர்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் வில்லியனூர் அருகே உள்ள பத்துகண்ணு பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்ற வலியுறுத்தினர்.
மேலும் இதனை கண்டிக்கும் வகையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் கொரோனா நோயானது பரவாது என்றும் அங்கு பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் பொது மக்களுக்கு எடுத்துக்கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். திடீரென பொதுமக்கள் சாலையில் அமர்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.