புதுமண தம்பதிகளுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை... பாராட்டை பெற்ற கோவை போலீசார்!

புதுமண தம்பதிகளுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை... பாராட்டை பெற்ற கோவை போலீசார்!
தம்பதிகள்
  • Share this:
புதுமண தம்பதிகளுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை கூறிய கோவை போலீசார் மக்களின் பாராட்டை பெற்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளை தவிர்த்த காரணங்களுக்காக, வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை விட்டு தேவையின்றி சுற்றியவர்களுக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் துறையினரின் நூதன தண்டனை வழங்கினர்


கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக அத்தியாவசிய காரணங்கள் இன்றி சுற்றிய நபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். கொரோனா வைரஸ் என்றால் என்ன, எப்படி பரவுகிறது என்பது குறித்து காவல் துறையினர் எடுத்துரைத்து, முக கவசங்களை வழங்கினர்.

மேலும் அவர்களுக்கு தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை பிடித்து கொரோனா வைரஸ் குறித்து எடுத்துரைக்க வேண்டுமென்ற நூதன தண்டனையை வழங்கினர்.

இதனிடையே சூலூர் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியினர் அவிநாசி நோக்கி கருமத்தம்பட்டி வழியாக காரில் சென்றனர். காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது, தம்பதிகள் முக கவசம் அணியாமல் இருந்தனர்.இதையடுத்து இருவருக்கும் முக கவசம் வழங்கிய காவல் துறையினர், கொரோனா வைரஸ் மற்றும் முக கவசம் அணிய வேண்டிய அவசியத்தியத்தை எடுத்துரைத்தனர். காவல் துறையினர் இந்த செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டை பெற்றது.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்