முகப்பு /செய்தி /கொரோனா / காவல்துறை வாகனம் மீது மலர்களைத் தூவிய மக்கள்...!

காவல்துறை வாகனம் மீது மலர்களைத் தூவிய மக்கள்...!

காவல்துறை வாகனம் மீது மலர்கள் தூவிய மக்கள்

காவல்துறை வாகனம் மீது மலர்கள் தூவிய மக்கள்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு  வருகிறது.

  • Last Updated :

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் காவல்துறையின் சேவையை பாராட்டி காவலர்கள் சென்ற வாகனம் மீது மக்கள் மலர்களை தூவியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். அதேநேரத்தில் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர்.

அப்படி வேலை செய்யும் காவல்துறையினரை மக்கள் சேர்ந்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தரபிரதேசத்தின் மீரட்டில் வழி நெடுகிலும் தனி மனித இடைவெளியில் நின்று காவல்துறை வாகனம் மீது மலர்களை தூவி காவலர்களை மக்கள் பாராட்டியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு  வருகிறது.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

top videos


    First published:

    Tags: CoronaVirus, Police, Uttar pradesh