கொரோனாவை மறந்து சென்னை காசிமேட்டில் மீன் வாங்கக் குவிந்த மக்கள்... மதுரை உள்ளிட்ட இடங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம்

காசிமேடு மீன் சந்தை

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.

 • Share this:
  காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை நடந்து வந்த பழைய மீன்பிடி ஏலக்கூடம் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அதன் அருகிலேயே, மீன் விற்பனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வியாபாரிகளுக்கும், மீன் வாங்க வருபவர்களுக்கு இடையே தனிமனித இடைவெளியை ஏற்படுத்தும் விதமாக, கயிறுகள் மூலம் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். சிறு வியாபாரிகள் ,சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என தனித்தனியாக விற்பனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  முகக்கவசம் அணியுமாறும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் எதையும் கண்டுகொள்ளாமல், ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மீன் வாங்குவதிலேயே மும்முரமாக உள்ளனர். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு கூட்டம் முண்டியடித்தது.

  சென்னை சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்டில் வரத்து இல்லாததால், 80 விழுக்காடு கடைகள் மூடிக்கிடக்கின்றன. இன்று முழு ஊரடங்கு இல்லையென நேற்று பிற்பகல்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து மீன்களை, சிந்தாதிரிபேட்டை மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாமல் போனது. 20 சதவீதக் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் நிலையில், மீன்களின் விலையும் அதிகம் காணப்படுகிறது.

  மேலும் படிக்க... Today Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 23)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: