Tamil Nadu Lockdown | திண்டுக்கல்லில் காய்கறி மார்க்கெட்டில் ஊரடங்கு விதிகளை மீறி குவிந்த மக்கள்

Youtube Video

திண்டுக்கல், காய்கறி மார்க்கெட்டில், ஊரடங்கு விதிகளை மீறி ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

  • Share this:
    திண்டுக்கல் - பழனி சாலையில், தனியார் இடத்தில் இரவு 2 மணி முதல் 5 மணி வரை தற்காலிக காய்கறி சந்தை செயல்படுகிறது. அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டும் இந்த சந்தைக்கு வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.  ஆனால் திண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் உரிமம் பெற்ற வாகனங்கள் மற்றும் உரிமம் பெறாத வாகனங்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை குவிந்ததால் காவல்துறையினரால் பொதுமக்களின் கூட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்த காய்கறி சந்தையில் கொரானா விதி முறைகலான சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. முகக்கவசங்கள் கிருமிநாசினி எதுவுமே பயன்படுத்தாமல் மக்கள் கூட்டம் குவிந்ததால் மேலும் தொற்றுநோய் பரவும் அபாய கூடாரமாக திண்டுக்கல் காய்கறி மார்கெட் விளங்கியது. அதனால் தொற்றுநோய் பரவா விதமாக பொது மக்களை காத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த காய்கறி மார்க்கெட்டை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையாக உள்ளது.

    மேலும் படிக்க.. தமிழகத்தில் இன்று முதல் மேலும் சில துறைகள் இயங்க அனுமதி





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: