தலைவலி மற்றும் உடல்வலியை ஏற்படுத்தும் Pfizer கொரோனா வைரஸ் தடுப்பூசி.. என்ன காரணம்?

காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை போலவே தலைவலி, தசை வலி மற்றும் காய்ச்சலால் பெரும் அவதிப்பட்டதாக பலர் கூறினர்.

தலைவலி மற்றும் உடல்வலியை ஏற்படுத்தும் Pfizer கொரோனா வைரஸ் தடுப்பூசி.. என்ன காரணம்?
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
Pfizer Inc மற்றும் ரஷ்யா உருவாக்கிய இரண்டு முன்னணி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன, மேலும் கோவிட் -19க்கு எதிராக 90% க்கும் மேலாக அவை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக மனிதருக்கு ஏதேனும் ஒரு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர், சில சமயங்களில், லேசான காய்ச்சல் மற்றும் வலியை அனுபவித்திருப்பத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு தடுப்பூசியின் விளைவாக ஹேங்ஓவர் ஏற்பட்டிருப்பதை கேள்விப்பட்டதுண்டா? அறிக்கையின்படி, ஃபைசர் தடுப்பூசி சோதனைக்கு முன்வந்தவர்கள் ஜபின் விளைவுகளை (Jab's effects) 'கடுமையான ஹேங்கொவர்' போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றனர். காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை போலவே தலைவலி, தசை வலி மற்றும் காய்ச்சலால் பெரும் அவதிப்பட்டதாக பலர் கூறினர். தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 45 வயதான ஒரு விளம்பரதாரர் (Publicist), முதல் டோஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பக்கவிளைவுகளுடன் தன்னை விட்டு சென்றதாகக் கூறினார்,

ஆனால் அவர் தனது இரண்டாவது தடுப்பூசி ஷாட் வழங்கப்பட்ட பின்னர் கடுமையான பக்கவிளைவு அறிகுறிகளை அனுபவித்தாக கூறினார். மற்றொரு தன்னார்வலரான டெக்சாஸ் பரப்புரையாளர் க்ளென் டெஷீல்ட்ஸ், தடுப்பூசியின் பக்க விளைவை ‘கடுமையான ஹேங்கொவர்’ உடன் ஒப்பிட்டார், ஆனால் அறிகுறிகள் விரைவாக மறைந்துவிட்டன. ஒரு தடுப்பூசி தன்னார்வலராக டெஷீல்ட்ஸ், தனது அனுபவத்தை முதலாம் உலகப் போரின் முடிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். முதல் உலகப் போர் முடிந்ததும் அவரது தாத்தா அனுபவித்ததை அவர் நினைவு கூறினார்.
மேலும் 45 வயதான விளம்பரதாரரான அவர் விசாரணையில் இது ஒரு ‘குடிமைக் கடமை’ என்று கூறினார். "தடுப்பூசியை பெற்ற பலரும் துன்பப்பட்டனர்," ஆதலால் இந்நிலை வேறு யாருக்கும் ஏற்பட தான் விரும்பவில்லை, என்றும் கூறினார்.

கொரோனா வைரஸுக்கு ஒரு சிறந்த தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் அமெரிக்க நிறுவனமான Behemoth Pfizer மற்றும் ஜெர்மன் பார்மா நிறுவனமான BioNtech ஆகியோரால் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனைகளில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 43,500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பெயர் கொடுக்க முன்வந்துள்ளனர்.ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் வழிகள்.. போட்டியாளரை சிரிக்க வைத்த அமிதாப் பச்சனின் அறிவுரை..

நவம்பர் 8, 2020 நிலவரப்படி மொத்தம் 38,955 பதிவுசெய்யப்பட்ட தன்னார்வலர்கள் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றனர். mRNA-அடிப்படையிலான Pfizer மற்றும் BioNtech, BNT162b2 தடுப்பூசிக்கான சோதனைகள் இரட்டை குருட்டு முறையைப் (Double-Blind Method) பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. பங்கேற்பாளர் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது தடுப்பூசியா அல்லது மருந்துப்போலியா என்பது பலருக்கும் தெரியது. சோதனை தடுப்பூசி ஷாட் 90 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும்,இது விரைவில் மனித வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தியுள்ளது.

corona vaccine

Pfizer-BioNtech ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் முற்போக்கான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ள நிலையில், அவர்கள் இந்த பந்தயத்தில் அவர்கள் மட்டும் தனியாக இல்லை. இந்த ஆண்டு அக்டோபரில், Sputnik V தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்கும்.

இந்தியாவில் விநியோக தொகுதிகள் தொடர்பான பணிகளுக்காகவும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் ரஷ்யா கூட்டுசேர்ந்துள்ளது. பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பார்மா நிறுவனமான AstraZenecaவும் இந்தியாவை சேர்ந்த மற்றொரு மருந்து நிறுவனமான Serum Institute of India உடன் ஒப்பந்தம் செய்து தங்கள் Oxford University தடுப்பூசியை பெருமளவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
First published: November 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading