தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் : அரசு கட்டுப்படுத்த கோரிக்கை..!

மருத்துவமனையில் தனி அறைக்கான கட்டணம், ஐ சி யு பயன்படுத்துவதற்கான கட்டணம், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதற்கான கட்டணம் ஆகியவற்றை அரசு நிர்ணயிக்க முடியும்.

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் : அரசு கட்டுப்படுத்த கோரிக்கை..!
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஒரு நாளுக்கான படுக்கை செலவு மட்டும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சில மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனை எடுத்து முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே  நோயாளி செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது.

மருத்துவர்கள் ஒரு முறை அணியும் பாதுகாப்பு உடைக்கு 4ஆயிரம் முதல் 5ஆயிரம் வரை செலவாகும். அந்த செலவும் கூட நோயாளர் மீது ஏற்றப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.


மக்கள் நல்வாழ்வு இயக்கத்தை சேர்ந்த அமீர்கான் கூறுகையில், கொரோனா பரிசோதனைக்கு 4500 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற வேண்டும் என்று அரசு நிர்ணயித்தாலும் 6 ஆயிரம் ரூபாய் வரை சில மருத்துவமனைகள் வசூலிக்கின்றன. அரசு நினைத்தால் தனியார் மருத்துவமனகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய முடியும். ஒரு நோயாளியின் உடல் நிலை பொருத்தே அவருக்கான சிகிச்சை மாறும் என்றாலும், மருத்துவமனையில் தனி அறைக்கான கட்டணம், ஐ சி யு பயன்படுத்துவதற்கான கட்டணம், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதற்கான கட்டணம் ஆகியவற்றை அரசு நிர்ணயிக்க முடியும்.

பிரதமர் ஆரோக்ய யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தல்கள் உள்ளன. அது குறித்து மாநில அரசு முடிவு செய்துக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான முழு கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும்.

கொரோனா அல்லாமல் வேறு சிகிச்சைகளுக்காக செல்பவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவர்களையும் உள்நோயாளிகளாக அனுமதித்து அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இது போன்ற சூழலை தவிர்க்க கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். மகாராஷ்ட்ரா அரசு ஒவ்வொரு நோய்க்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது.அறிகுறிகள் இல்லாத நோயாளிகளை வர்த்தக மையம், கல்லூரி ஆகியவற்றில் அனுமதிப்பதற்கு பதிலாக  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இட வசதி ஏற்படுத்தி அங்கு சிகிச்சை வழங்கலாம். தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலும் காலியாக தான் உள்ளன " என்கிறார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சி என் ராஜா, பேசும்போது, "தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டுவந்தால் ஏழை நடுத்தர மக்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிதாகும் என தெரிவிக்கிறார்" என்கிறார்.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading