இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதமாக நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்க வேண்டும். இந்த குழுவினர் ஒன்றாக சந்தித்து உணவருந்தவோ, குழந்தைகள் பராமரிப்பை பகிர்ந்து கொள்ளவோ அனுமதிக்கப்படுவர். ஒரு குழுவில் பத்து பேர் வரை இணைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
ஆனால் ஒரு குழுவில் இருப்பவர்கள் மற்ற குழுக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதி கிடையாது. கொரோனா அபாயம் இல்லாமல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.