கொரோனா குறித்து கவலை இல்லை... தனி முகாமில் குத்தாட்டம் போட்ட மாணவர்கள்!

கொரோனா குறித்து கவலை இல்லை... தனி முகாமில் குத்தாட்டம் போட்ட மாணவர்கள்!
கொரோனா
  • News18
  • Last Updated: February 2, 2020, 5:49 PM IST
  • Share this:
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில்,தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக கட்டியுள்ளது. 7 நாட்களில் இந்த மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டிமுடித்துள்ள நிலையில், நாளை முதல் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.


இந்தநிலையில், சீனாவின் ஊஹான் பகுதியில் வசிக்கும் சுமார் 330 இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே, அவர்களைத் தனிமைப்படுத்தி சோதனை செய்வதற்காக இந்தியா ராணுவம் சார்பில் ஹரியானா மாநிலத்தில் மானேசர் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமில் தங்க வைக்கப்படும் மாணவர்கள் இரண்டு வார காலத்துக்கு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடைய ஹரியானா மாநிலத்தில் மானேசர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் ஹிந்தி பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவில் மாஸ்க் அணிந்த படி மாணவர்கள் மகிழ்வாக ஆடி வருகின்றனர். இதனை ஹிந்தி இணையதளமும் வெளியிட்டுள்ளது.

 

இதனை இணையத்தில் பலரும் பகிர்ந்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading