Home /News /coronavirus-latest-news /

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ‘சேலஞ்ச்கள்’...! திருப்பூர் ஆட்சியருக்கு மத்திய அமைச்சகம் கவுரவம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ‘சேலஞ்ச்கள்’...! திருப்பூர் ஆட்சியருக்கு மத்திய அமைச்சகம் கவுரவம்

திருப்பூர் ஆட்சியர்

திருப்பூர் ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரின் செயல்களால் கவரப்பட்ட, திருப்பூர் மக்கள் சமூக வலைதளத்தில் டாக்டர் விஜய் கார்த்திகேயன் பேன் க்ளப் என்ற பெயரில் பக்கம் துவக்கி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மக்களை கவர்ந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியரை கவுரவிக்கும் விதமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் போஸ்டர் வெளிட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 114 என்று இருந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜயகார்த்திகேயன் சமூக வலைதளங்கள் வாயிலாக சமூக இடைவெளி குறித்தும் அதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக பலவித சவால்களை விடுத்திருந்தார்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உணவு தயார் செய்வோம், வெளியே செல்லாமல் இருப்போம் என ’கிவ்அப் சேலன்ச்’, ஊரடங்கு காலத்தில் வாக்கிங் செல்வதாக வெளியே சுற்ற வேண்டாம், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ’இன்சைடு வாக்கிங் சேலன்ச்’, சமூக இடைவெளியை பின்பற்ற ’அம்பர்லா சேலன்ச்’ என சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்றியதை கவுரவிக்கும் விதமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் போஸ்டர் வெளிட்டுள்ளது.

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பாராட்டு போஸ்டர்


மாவட்ட ஆட்சியரின் செயல்களால் கவரப்பட்ட திருப்பூர் மக்கள் சமூக வலைதளத்தில் ’டாக்டர் விஜய் கார்த்திகேயன் பேன் க்ளப்’ என்ற பெயரில் பக்கம் துவக்கி ஆட்சியருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களை ’கெஸ்ட் ஒர்க்கர்ஸ்’ என அழைத்து அவர்களை மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்துள்ளார் என்ற வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Thiruppur

அடுத்த செய்தி