• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பிசிஆர் நெகடிவ் என்றால் கொரோனா இல்லை என்று அர்த்தம் இல்லை - மருத்துவர்கள் எச்சரிக்கை

பிசிஆர் நெகடிவ் என்றால் கொரோனா இல்லை என்று அர்த்தம் இல்லை - மருத்துவர்கள் எச்சரிக்கை

பிசிஆர் கிட்ஸ் (கோப்புப்படம்)

பிசிஆர் கிட்ஸ் (கோப்புப்படம்)

கொரோனா நெகடிவ் வந்து, சளி, இருமல், மூச்சுத் திணறல் என அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம்.

  • Share this:
கொரோனா தொற்றை உறுதி செய்ய பிசிஆர் பரிசோதனையே பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அந்த பரிசோதனையில் நெகடிவ் வந்தால் தொற்று இல்லை என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிசிஆர் நெகடிவ் வந்து கொரோனா அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் மூலம் தொற்றை உறுதி செய்யலாம்.  அந்த வகையான நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக அரசு மருத்துவமனைகளில் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை சரியாக செய்தால் மட்டுமே தொற்றை உறுதி செய்ய முடியும்.

பிசிஆர் பரிசோதனையின்போது 10 விநாடிகள் மூக்கின் உள் அந்த குச்சி இருக்க வேண்டும், மாதிரி எடுக்கப்படுபவருக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தினால்தான் சரியாக மாதிரி எடுக்கப்பட்டதாக அர்த்தம். சில நேரங்களில் மாதிரிகளை ஆய்வகத்துக்கு சரியான முறையில் கொண்டு செல்லாவிட்டால் நெகடிவ் காட்டலாம்.

இருமல் சளி தொந்தரவு இருப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு முன்பே சிடி ஸ்கேன் செய்துகொள்ளலாம் என்று கூறும் நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜெயராமன், பத்தே நிமிடங்களில் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என தெரிந்துகொள்ளலாம். எந்த அளவுக்கு பாதிப்பு என்றும் தெரிந்துகொள்ளலாம். 40க்கு பூஜ்ஜியம் என்றால் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். 40க்கு 20 என்றால் 50% பாதிப்பு என்று அர்த்தம் என்கிறார்.

Also read: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 60

மற்றொரு நுரையீரல் நிபுணரான டாக்டர் அனந்த சுப்ரமணியன் கூறுகையில்,  பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரியை சரியாகவே எடுத்தாலும் 70% பேருக்கு மட்டுமே பாசிடிவ் காட்டும். எனவே நெகடிவ் வந்து, சளி, இருமல், மூச்சுத் திணறல் என அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம். மற்ற நுரையீரல் பாதிப்புகளுக்கும் கொரோனா பாதிப்புக்கும் சிடி ஸ்கேன்-ல் வித்தியாசம் தெரியும். அதை வைத்து சிகிச்சை தொடங்கலாம். எனவே கொரோனா நெகடிவ் என்றால் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்று கூறுகிறார்.



சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிசிஆர் நெகடிவ் என காட்டுபவர்களுக்கான பிரத்யேகமான வார்டு தொடங்கப்பட்டது. சிடி ஸ்கேன் மூலமாக அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டாலும் பிசிஆர் நெகடிவ் என்றால் நோயாளிகள் தனக்கு தொற்று இல்லை என நினைத்துக்கொண்டு குழப்பத்தில் இருப்பதால், 120 படுக்கைகளுடன் தனி வார்டு கடந்த வாரம் அமைக்கப்பட்டுள்ளது என அந்த மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார்.

இதேபோன்ற பிரத்யேக வார்டுகள் சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: