குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுபாட்டால் நோயாளிகள் தவிப்பு..

மாதிரி படம்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

 • Share this:
  சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த குரோம் பேட்டையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புறநகர் பகுதிகளில் உள்ள நோயாளிகள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

  மேலும் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.

  இந்நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  இதனால் 8க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும் ஆம்புலன்ஸும் தட்டுப்பாடு உள்ளதால் நோயாளிகள் மருத்துவமனையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூச்சுத் திணறல் காரணமாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: