கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்ற நபர் விலகல் - உடல்நல பாதிப்புக்கு ₹5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்ற நபர் விலகல் - உடல்நல பாதிப்புக்கு ₹5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்திற்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

  • Share this:
கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டிருந்த நபர் உடல் பாதிப்புகள் காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை புனேவின் சீரம் நிறுவனம் மத்திய அரசின் மேற்பர்வையில் நடத்துகிறது.

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் இந்த தடுப்பு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்றது. இதில் அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் பங்கேற்றுள்ளார். அவருக்கு அக்டோபர் 1ம் தேதி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அடுத்த பத்து நாட்களில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைய ஆரம்பித்ததாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரை கண்டறிய இயலாமை, அடிக்கடி கோவப்படுவது என பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

அக்டோபர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இழப்பீடாக தனக்கு 5 கோடி ரூபாய் வழங்குவதோடு இந்த சோதனையை உடனே நிறுத்துமாறும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த அவரது வழக்கறிஞர் என் ஜி ஆர் பிரசாத் " தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் அவர் வழக்கமாக தன் அலுவல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதன் காரணமாகவே அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு பல மணி நேரங்களாக பதில் அளிக்கவில்லை.





அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
Published by:Vijay R
First published: