சென்னைக்கு கோயம்பேடு; மதுரைக்கு பரவை; தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகம்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு கோயம்பேடு; மதுரைக்கு பரவை; தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகம்...
மதுரை பரவை சந்தை (கோப்பு)
  • Share this:
சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றிய 2000 பேரை கண்காணிக்கவும் நூற்றுக்கணக்கானோரை தனிமைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி சந்தை நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் அளவிற்கு பெரிய வியாபார ஸ்தலமாக உள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் காய்கறிகள் தென்மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன. லோடுமேன்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், விவசாயிகள் என தினமும் இரண்டாயிரம் பேர் பரவை சந்தையில் பணியாற்றி வந்தனர். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் போன்றே பரவை மார்க்கெட்டிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டு நான்கு வெவ்வேறு இடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பரவை காய்கறி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பணியாற்றியவர்கள் விவரம் பெறப்பட்டு 1009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பேருக்கு தீவிர தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை மையத்திற்கு அழைத்து வர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பரவை சந்தையில் பணியாற்றியவர்கள் உடன் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தவர்கள் என 2000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டவர்களுடைய முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதனுடைய எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையில் பரவை காய்கறி சந்தையின் பங்களிப்பு பெரிய அளவில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே மதுரையிலும் காய்கறி சந்தை மூலம் கொரோனா தொற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading