Home /News /coronavirus-latest-news /

கொஞ்சம் கூட வலியோ, சோர்வோ இல்லை - பிளாஸ்மா தானம் செய்த அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகர்

கொஞ்சம் கூட வலியோ, சோர்வோ இல்லை - பிளாஸ்மா தானம் செய்த அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகர்

பரமக்குடி எம்.எல்.ஏ

பரமக்குடி எம்.எல்.ஏ

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட ப்ளாஸ்மா வங்கியில் முதல் நபராக பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்டு அதிக மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா சிகிச்சை முடித்தவர்கள் அடுத்த 14 நாட்களில் பிளாஸ்மா தானம் செய்யலாம். அவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தினால் அவர்கள் குணமடைய வாய்ப்புகள் உள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ப்ளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முதல் நபராக ப்ளாஸ்மா தானம் செய்துள்ளார் பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர்.

பிளாஸ்மா தானம் செய்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "கொரோனாவிலிருந்து குணமாகி வந்து விட்டேன். பிளாஸ்மா தானம் பற்றி கேள்விப்பட்டு நானும் கொடுக்க வேண்டுமென்ற ஆசையில வந்தேன். ரத்ததானம் கொடுக்கும்போது எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இருந்தது.

நம்ம உடம்புல இருந்து ரத்தத்தை எடுத்து மெஷின்ல பிளாஸ்மாவ பிரிச்சு எடுத்துட்டு திருப்பியும் அந்த ரத்தத்தை உடம்புல ஏத்திட்டாங்க. கொஞ்சம் கூட வலியோ சோர்வோ இல்ல,ரொம்ப நல்லா இருக்கேன். இன்னும் அடுத்த 14 நாள் கழித்து மீண்டும் பிளாஸ்மா தானம் பண்ணலாம்னு இருக்கேன்.




படிக்க: மார்ச் மாதத்தைவிட ஜூன் மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணம்- காரணம் என்ன?

படிக்க: செல்ல மகனிடம் அன்பை பொழியும் நடிகை ஏமி ஜாக்சன் - கியூட் புகைப்படங்கள்

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்








நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறவங்களுக்கு,நிறைய பேர் இந்த மாதிரி தானம் கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும். இதை எடுத்து அவங்க ஸ்டோர் பண்ணி வச்சுப்பாங்க,ஒரு வருஷம் வரைக்கும் கெட்டுப் போகாது.இது நிறைய பேருக்கு தேவைப்படும், அதனால நிறைய பேர் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம் நல்ல விஷயம்"என்றார்.
Published by:Vijay R
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி